நண்பர்கள்



திருமிகு. பி. ஆர். லெட்சுமி
பல கருத்தரங்குகளிலும், நாளிதழ்களிலும் இணையம் தொடர்பாகவும், செம்மொழித் தமிழ் குறித்தும், தமிழ் இலக்கியங்கள் குறித்தும், கல்வியியல் சிந்தனைகள் பற்றியும் எழுதி வருபவர். பல்வேறு பள்ளிகளில் தமிழ் வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருபவர். பல கவிதை நூல்களின் ஆசிரியர். வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தமிழ்த் துறைஆலோசகர், மற்றும் செம்மொழி நிறுவனத்தின் ஆய்வுத்திட்டப்பணி உதவியாளர் என்ற பல்வேறு பணிகளை ஆற்றிவரும் இவரின் நட்பும் ஆய்வுச்சுற்றத்தை வலுசேர்க்கிறது. 

. முனைவர் அ. குணசேகரன்
       கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி வருகிறார். பெண்ணியம், தலீத்தியம் முதலான துறைகளில் இயங்கி வருகிறார். கவிஞர், சிறுகதையாளர்
  முனைவர் க. துரையரசன்
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். மயிலை சீனி வேங்கடசாமி பற்றி ஆய்வு நிகழ்த்தியவர். கணினித் தமிழ் சார்ந்து இயங்கி வருபவர்

முனைவர் வேல். கார்த்திகேயன் 
மயிலம் தமிழ்க்கல்லூரியில் மரபு அடிப்படையில் தமிழ் பயின்றவர், பக்தி இலக்கிய ஈடுபாடு உடையவர், பதினைந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான கருத்தரங்க மாநாடுகளை நடத்தியவர், முனைவர் வ. ஜெயதேவன் அவர்களின் வழிகாட்டல்படி திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் முனைவர்பட்டத்தை முடித்தவர், தற்போது புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக